Home அறிவியல் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் நோக்கி சென்றது பல்கான் 9 ராக்கெட்!

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் நோக்கி சென்றது பல்கான் 9 ராக்கெட்!

29
0

சர்வதேச விண்வெளி மையத்திற்கு நாசா விண்வெளி வீரர்களை ஏற்றிக்கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பல்கான் 9 ராக்கெட் இன்று அதிகாலை வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் நோக்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் அமெரிக்காவில் புளோரிடாவில் இருக்கும் கென்னடி ஸ்பேஸ் செண்டர் காம்பளக்ஸ் 39 ஏ-ல் இருந்து ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்ததும் நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ஊழியர்கள் தங்கள் மகிழ்ச்சியை ஆரவாரத்துடன் வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொண்டிருந்தார்.

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு ஆராய்ச்சி செய்வதற்காக விண்வெளி ஆராய்ச்சியில் அதிக அனுபவம் கொண்ட நாசாவை சேர்ந்த பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லி ஆகிய இரு விண்வெளி ஆரய்ச்சி வீரர்கள் இதில் பயணம் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.