Home உலக செய்திகள் சிங்கம்பட்டி ஜமீனும், தமிழகத்தின் கடைசி ஜமீனுமான டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்!

சிங்கம்பட்டி ஜமீனும், தமிழகத்தின் கடைசி ஜமீனுமான டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்!

102
0

நீண்ட பாரம்பரியம் கொண்ட சிங்கம்பட்டி சம்ஸ்தானத்தின் 31வது ஜமீந்தாரும், தமிழகத்தின் கடைசி ஜமீந்தாருமான டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சிங்கப்பட்டி ஜமீன் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி அவர்கள் தனது 81வது வயதில் நேற்றைய தினம் காலமான செய்தி தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

360 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் பல கிராமங்களை உள்ளடக்கியதே சிங்கம்பட்டி எனும் குறு நில அரசு.

பாண்டிய மன்னனின் வழித்தோன்றல்கள் ஆட்சி செய்து வரும் 920 வருட பாரம்பரியம் கொண்ட சிங்கம்பட்டி சிங்கம்பட்டி சம்ஸ்தானத்தின் 31வது ஜமீந்தாராக டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி அவர்கள் தனது 3 வயதில் முடிசூடியிருந்தார்.

சிங்கம்பட்டி ஜமீன் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி அவர்களின் அரண்மனை ஏக்கரில் அமைந்துள்ளது. இங்கு 1000 குதிரைகள் பராமரிக்கப்பட்டு வந்ததாகவும், தங்க பல்லக்குகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

சிங்கம்பட்டி ஜமீன் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி அவர்களின் வாரிசுகளாக இரு மகன்களும், மூன்று மகள்களும் இருக்கின்றனர்.

இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில், 1983ல் ஈழப் பிரச்சினை கடுமையாக இருந்த போது விடுதலைப் புலிகளுக்கு பயிற்சி முகாம் அமைத்துக் கொடுக்கவும் அதற்கான உதவிகளைச் செய்யவும் மத்திய அரசு செயலில் இறங்கிய போது தானாக முன்வந்து சிங்கம்பட்டி ஆட்சிக்கு உட்பட்ட பாவநாசம் மலைத் தொடரில் பயிற்சி முகாம் அமைக்க இடம் கொடுத்த போதும் அது பயிற்சிக்கு உகந்த இடம் இல்லாததால் கைவிடப்பட்டிருந்தது.

அது மட்டுமன்றி இன்னுமோர் சந்தர்ப்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் அக்காலம் முதல் இறுதி யுத்தம் வரை எப்போது தலைவர் அருகிருக்கும் பேபி சுப்பிரமணியம் உட்பட சிலர் மதுரைக்கு செல்வதற்கு தனது காரை வழங்கியவரும் இதே சிங்கம்பட்டி ஜமீன் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி அவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.