Home செய்திகள் வெடுக்குநாரி மலை ஆலய வழக்கு ஜூன் 9 வரை ஒத்திவைக்கப்பட்டது:

வெடுக்குநாரி மலை ஆலய வழக்கு ஜூன் 9 வரை ஒத்திவைக்கப்பட்டது:

21
0

வவுனியா – வெடுக்குநாரி மலை ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக புதிய பிரிவின் கீழ் வவுனியா நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நிர்வாகத்தினர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

வழக்கு தொடர்பான விசாரணைகள் நேற்று (22) வவுனியா நீதிமன்றில் இடம்பெற்றது.ீ

இதன்போது ஆலய நிர்வாகத்தினர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த போதிலும் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த வழக்கு இலக்கம் அழைக்கப்பட்டிருக்கவில்லை.

புதிய பிரிவின் கீழ் வழக்கு அழைக்கப்பட்டருந்தது. அதன்படி ஆஜராகிய மூவரையும் தலா 50 ஆயிரம் பெறுமதியான சரீரப் பிணையில் நீதிவான் விடுவித்திருந்ததுடன், எதிர்வரும் 9ம் மாதம் பத்தாம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

தாம் முன்னைய வழக்கின் தவணைக்கே ஆஜராகிய நிலையில், புதிய பிரிவில் வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளமை தொடர்பாக தாம் அறிந்திருக்கவில்லை என்று ஆலய நிர்வாகத்தினர் இதன்போது தெரிவித்திருந்தனர்.