Home செய்திகள் ஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை வழங்கப்பட...

ஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை வழங்கப்பட வேண்டும்:

19
0

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் திறமையான இளம் கிரிக்கெட் வீரர்கள் இருக்கிறார்கள். அங்கிருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை வழங்கி வீழ்ச்சியடைந்துள்ள இலங்கை கிரிக்கெட்டை மேம்படுத்த அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்” என இலங்கையின் முன்னாள் சிரேஷ்ட கிரிக்கெட் வீரர்கள் சிலர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடன் அலரி மாளிகையில் நேற்று முன் தினம் நடைபெற்ற கலந்துரையாடலில்,

“வடக்கு, கிழக்கில் போட்டித் தொடர்களை நடத்திய போது ஆற்றல்கள் மிக்க பல வீரர்கள் இருப்பதை என்னால் அவதானிக்க முடிந்ததது எனினும், அவர்களுக்கான வசதிகள் குறைவாகவே உள்ளது” என, இலங்கை கிரிக்கெட் அணியின் மற்றுமொரு முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார குறிப்பிட்டுள்ளார்.

” சங்கா கூறியதைப் போல் நானும் வடக்கிற்கு சென்றபோது இவற்றை அவதானித்தேன். வடக்கு, கிழக்கு வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உதவிகள் போதாது அங்கிருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை வழங்கப்பட வேண்டும், வீழ்ச்சியடைந்துள்ள இலங்கை கிரிக்கெட்டை மேம்படுத்த அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்” என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.

“வட மாகாணத்தில் 26 பாடசாலைகள் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றன. அவர்களுக்கென முழுமையான மைதானத்துடன் ஒரு ஆடுகளம் மாத்திரமே உள்ளது. வடக்கு கிழக்கை எடுத்துக் கொண்டால் அங்கு திறமையான சிறுவர்கள், சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் இன்னும் அதற்கான வசதிகளைப் பெற்றுக் கொடுக்கவில்லை. அது தொடர்பில் நமக்கும் பொறுப்புள்ளது என்றே நான் நினைக்கின்றேன்” என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன குறிப்பிட்டுள்ளார்.