Home தாயக செய்திகள் 1958 தமிழினப் படுகொலையின் 62ம் ஆண்டு நினைவு இன்று!

1958 தமிழினப் படுகொலையின் 62ம் ஆண்டு நினைவு இன்று!

61
0

இலங்கை தீவு பிரித்தானியாவிடம் இருந்து சுதத்திரம் அடைந்த பின், தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட முதலவது இனப்படுகொலையில் 300 க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

1958 மே 22 முதல் 27 வரை சிங்கள பேரினவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட இனக்கலவரத்தில் கொல்லப்பட்ட 300 க்கும் அதிகமான தமிழர்களின் நினைவு இன்றாகும்.

1956 இல் சாலமன் பண்டாரநாயக்கா “பெரும்பான்மை சிங்களமயமாக்கல்” எனும் முளக்கத்துடன் ஆட்சியை கைப்பற்றிய பின் தனிச் சிங்களச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கையின் கிழக்கே “கல்லோயா” வில் 150 க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

அதன் பின்னர் படிப்படியே தமிழர்கள் மீதான தாக்குதல்களும், அடக்குமுறைகளும் அதிகரித்து, தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டும், பறிக்கப்பட்டும் வந்ததோடு 1958 இல் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இருப்பினும், கைப்பற்றப்பட்ட உடல்களின் எண்ணிக்கையை வைத்தே சுமார் 300 க்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டதாக பதிவு செய்யப்பட்டது. ஆனால் உயிரோடும், தாக்கப்பட்டு, கொல்லப்பட்ட பின்னர் உடல்களாகவும் ரயர்களை போட்டு எரியூட்டப்பட்ட சம்பவங்களில் உள்ளவர்கள் இந்த 300 பேரில் அடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வேலையில் தான் தனிச் சிங்கள சட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்ததோடு வடக்கு கிழக்கிலேனும் தமிழ் மொழி அரச கரும மொழியாக இருக்க வலியுறுத்தி அப்போதய பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்காவுடன் தந்தை செல்வா என அழைக்கப்பட்ட செல்வநாஜகம் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட “பண்டா – செல்வா” ஒப்பந்தமும் ஐக்கிய தேசியக் கட்சியினால் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையில் மேகொள்ளப்பட்ட கண்டி நோக்கிய எதிர்போராட்ட யாத்திரையை அடுத்து கிளித்தெறியப்பட்டிருந்தது.

இவ்வாறான ஐக்கிய தேசியக் கட்சியுடன் தான் இன்றும் தமிழ் தலைமைகள் ஒட்டி உறவாடி ஏதோ அவர்களால் தமிழர்களுக்கு பெற்றுவிடலாம் என கல்லில் நார் உரிக்க முனைவது வேடிக்கையானது, வேதனையானதுமாகும்.

1972ஆம் ஆண்டு இதே நாளில் தான், இலங்கையில் புதிய அரசியலமைப்புச் சட்டம் அமுலுக்கு வந்து குடியரசு ஆகியதோடு – சிலோன், ஸ்ரீலங்கா எனப் பெயர் மாற்றம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.