Home செய்திகள் யாழ், கிளிநொச்சி மாவட்டங்களில் கடும் காற்றால் வீடுகள், தோட்டங்கள் சேதம்:

யாழ், கிளிநொச்சி மாவட்டங்களில் கடும் காற்றால் வீடுகள், தோட்டங்கள் சேதம்:

9
0

யாழ் மாவட்டத்திலும் காற்றின் தாக்கமானது கடந்த 24 மணி நேரத்திற்குள் உயர்வானதாக உணரப்பட்டுள்ளது. நேற்று வீசிய காற்றின் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் கைதடி பகுதியில் பாடசாலை ஒன்றும் சேதமடைந்துள்ளது.

மேலும் மயிலிட்டி பகுதியில் மரம் முறிந்து விழுந்து ஒரு பெண் காயமடைந்த நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அவர் கூறினார்.

அதேவேளை, யாழ்ப்பாணம் கிளிநொச்சி, வவுனியா போன்ற பகுதிகளில் இன்று வீசும் பலத்த காற்றினால் மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். கடும் காற்றினால் யாழ் நீர்வேலிப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து நாசமாகியுள்ளன.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் பலத்த காற்றினால் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தமையல் பல கிராமங்களுக்கு மின்சாரம் தடை ஏற்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று காலை முதல் வீசி வரும் பலத்த காற்று காரணமாக பூநகரி குடமுருட்டி பகுதியில் உள்ள மின் கம்பங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக பூநகரிப் பிரதேசத்தில் உள்ள பல கிராமங்களுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது. ஆறு மின்கம்பங்கள் முற்றாக சேதமடைந்துள்ளது .

இதே வேளை கிளிநொச்சி இரத்தினபுரம் சித்தி விநாயகர் ஆலயத்திற்கு முன்பாக காணப்பட்ட பாரிய பாலை மரம் வீழ்ந்தன் காரணமான இரண்டு மின் கம்பங்கள் சேதமடைந்தமையால் வட்டக்கச்சி, இராமநாதபுரம் பகுதிகளுக்கான மின்சாரம் முற்றாக தடைப்பட்டுள்ளது.

வவுனியாவில் இன்று காலை வீசிய பலத்த காற்றினால் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையால் கடை ஒன்றின் கூரைப்பகுதி சேதமடைந்துள்ளது. அதிவேகமாக வீசும் பலத்த காற்றினால் வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள மரக்கறி கடையின் கூரைப்பகுதியே சேதமடைந்துள்ளது.