Home செய்திகள் மஹிந்த சமரசிங்கவின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமை நீக்கம்:

மஹிந்த சமரசிங்கவின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமை நீக்கம்:

7
0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பாக களுத்துறை மாவட்டத்தில் 2020 பொதுத் தேர்தலில் போட்டியிட சமரசிங்க வேட்பு மனுக்களை சமர்ப்பித்ததை அடுத்தே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின், களுத்துறைக்கான புதிய மாவட்டத் தலைவராக சுனித் லால் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.