Home முக்கிய செய்திகள் தேர்தல் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு:

தேர்தல் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு:

25
0

ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்த முனைவது மற்றும் பாராளமன்றம் அற்ற சட்டத்திற்கு புறம்பான தனிமனித ஆட்சிமுறமைக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நாளை (20/05) காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதி குழாம் முன்னிலையில் குறித்த விசாரணைகள் நேற்று இடம்பெற்றதோடு , இன்றும் (19) இரண்டாவது நாளாகவும் இடம்பெற்ற நிலையிலேயே நாளை (20/05) காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்றும், இன்றும் இடம்பெற்ற விவாதங்களில் முன்னிலையாகி மனுசார்பில் வாதிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்

  • பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 3 மாதங்களுக்குள் புதிய பாராளுமன்றம் அமைக்கப்பட வேண்டும்.
  • பராளுமன்றம் கலைக்கப்படும் போதே 3 மாத காலத்திற்குள் தேர்தல் இடம்பெறும் திகதி, மற்றும் புதிய பாராளுமன்றம் கூடும் திகதிகள் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • ஒரு நாட்டின் நிதி நிர்வாகம் பாராளுமன்றம் இல்லாமல் தனி ஒருவரால் கையாளும் அதிகாரம் இல்லை.
  • நாட்டின் நிலமை இன்னமும் வைரஸ் தாக்கத்தில் இருந்து விடுபடாத நிலையிலும், நாளுக்கு நாள் கொரோனா நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கும் சூழலில் தேர்தலை நடாத்தவும், பாதுகாப்பற்ற சூழலில் மக்கள் நடமாட்டத்திற்கு அனுமதிப்பது தொடர்பாகவும் சுட்டிக் காட்டி இலங்கை அரசியல் அமைப்பு சட்ட வரைபை ஆதாரம் காட்டி விவாதிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.