Home செய்திகள் செம்மணியில் – தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம்!

செம்மணியில் – தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம்!

23
0

யாழ்ப்பாணம் – நாவற்குழிக்கும், செம்மணிக்கும் இடைப்பட்ட பகுதியில் A9 வீதி ஓரமாக நிற்கும் அரச மரத்தில் ஆண் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இன்று (05/19) காலை மீட்கப்பட்ட குறித்த சடலம் கல்வியங்காட்டை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் எனவும், ஒரு பிள்ளையின் தந்தை எனவும் தெரியவந்துள்ளது.

இன்று காலை வீதியால் பயனித்தோர் சடலத்தை அவதானித்து சாவகச்சேரி பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை பொறுப்பேற்றதுடன், இது தற்கொலை தானா… அல்லது கொலையா எனும் இரு கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.