Home செய்திகள் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல மாவட்டங்களை தாக்கவுள்ள கடும் மழை:

எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல மாவட்டங்களை தாக்கவுள்ள கடும் மழை:

19
0

எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல மாவட்டங்களில் 200 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதன்படி, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் 200 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ள இலங்கை வளிமணடலவியல் திணைக்களம் மண் சரிவுகள் மற்றும் மரங்கள், பழைய கட்டிடங்கள் என்பவற்றில் கூடிய அவதானத்தோடு மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறும் கேடுக்கொண்டுள்ளது.