Home செய்திகள் ஈழம் என்ற கனவை முற்றாக ஒழித்தழிக்க வேண்டும்: அத்மிரல் சரத் வீரசேகர

ஈழம் என்ற கனவை முற்றாக ஒழித்தழிக்க வேண்டும்: அத்மிரல் சரத் வீரசேகர

48
0

புலியின் வால் பகுதி மட்டுமே போரில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாகவும் புலியின் ஏனைய பகுதிகள் உலகம் முழுவதும் பரவிக்கிடப்பதாகவும் குறிப்பிட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்மிரல் சரத் வீரசேகர தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கத்துடன் இணைந்து ஈழம் என்ற கனவை முற்றாக ஒழித்தழிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

த கார்டியன் பத்திரிகை இலங்கையை ஈழம் என குறிப்பிட்டிருந்தமை தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கம் உடனடியாக தலையீட்டதன் காரணமாக கார்டியன் பத்திரிகை தாம் வெளியிட்ட கருத்தை திரும்ப பெற்றுக்கொண்டது. இதனையும் ஒரு விதத்தில் வெற்றியாகவே கருத வேண்டும். 

அதேவேளை, புலம்பெயர் தமிழர்கள் மிகவும் வலுவான முறையில் ஐரோப்பாவில் செயற்படுவதன் காரணமாக அரசாங்கத்தின் முழுப் பலத்தையும் பயன்படுத்தி அதற்கு எதிராக செயற்பட வேண்டும். எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், வரலாற்று ரீதியாகவே “ஈழம்” என இலங்கை அழைக்கப்பட்டுவந்ததை ஆதாரங்களோடு சுட்டிக்காட்டி பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் குறித்த த கார்டியன் பத்திரிகையை மீளப் பதிவு செய்ய வைக்கவும், இலங்கை அரசின் வரலாற்று அழிப்பை கண்டிக்கவும் தமிழர் அமைப்புக்களும், வரலாற்று ஆய்வாளர்களும் முயலாதது வேதனைக்குரியதே.