Home தாயக செய்திகள் முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெற்ற நினைவு வணக்க நிகழ்வு!

முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெற்ற நினைவு வணக்க நிகழ்வு!

48
0

வகை தொகை இன்றி பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை அரச பயங்கரவாதத்தால் கொன்றழிக்கப்பட்ட தினமான இன்று அதே மண்ணில் அவ் உயிர்களை நினைந்து அஞ்சலிக்கப்பட்டது.

குறித்த முளிவாய்க்கால் படுகொலையில் தன் கணவன் உட்பட பிள்ளைகளையும் இழந்து தவிக்கும் பெண் (லக்ஸ்மணன் பரமேஸ்வரி) பிரதான சுடரினை ஏற்றி வைக்க, நினைவு வணக்க நிகழ்வுகள் ஆரம்பமாயின.

நாட்டில் நிலவும் அசாதாரண சூழல், மற்றும் அச்சுறுத்தல்களுக்கு ஏற்றால் போல் சமூக இடைவெளியையும், சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றி இன்றைய இந்த நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் தற்போதைய நிலமையை கருத்தில் கொண்டு வீடுகளில் இருந்தவாறு விழக்கேற்றி அஞ்சலிக்குமாறு தமிழ் மக்கள் பேரவை, மற்றும் தமிழ் சிவில் சமூகம் ஆகிவற்றால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க மக்கள் அதிகமாக வெளி நிகழ்வுகளில் பங்குபற்றவில்லை.