Home உலக செய்திகள் LockDown நடைமுறையில் நெகிழ்வுத் தன்மையை அறிவித்தது பிரித்தானியா:

LockDown நடைமுறையில் நெகிழ்வுத் தன்மையை அறிவித்தது பிரித்தானியா:

122
0

பிரித்தானியாவில், இயல்பு நிலை முடக்கத்தினை முற்றாக நீக்கும் சூழல் இன்னமும் உருவாகவில்லை என தெரிவித்துள்ள அந் நாட்டின் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இருப்பினும் தற்போதுள்ள சில கட்டுப்பாடுகளில் நெகிழ்வுத் தன்மை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நேற்று (10/05) இரவு பிரித்தானிய நேரம் 7:00 மணிக்கு தொலைக்காட்சி வழியாக நேரடியாக நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோதே பிரதமர் பொறிஸ் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

இயல்பு நிலை முடக்கத்தினை முற்றாக நீக்கும் சூழல் இன்னமும் உருவாகவில்லை. அதற்கு நோய் பரவல் குறைவடைய வேண்டும். கொரோனா நோயால் இறப்போர் எண்ணிக்கை மிக மிக குறைவடைய வேண்டும். அத்தோடு குறித்த வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கான தடுப்பு மருந்து கண்டறியப்பட வேண்டும். அதுவரையில் LockDown அமுலில் இருக்கும் எனவும், இருப்பினும் பயிற்சிக்காகவோ, வேலைக்காகவோ அல்லது தங்கள் அத்தியாவசிய தேவைக்காகவோ வெளியில் செல்வோருக்கான கட்டுப்பாடுகளில் சில நெகிழ்வுத் தன்மை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதற்கமைய..

  • உடற் பயிற்சிக்காகவோ, வேலைக்காகவோ அல்லது உங்கள் தேவைக்காகவோ  வெளியில் செல்லலாம்.
  • ஆனால் வெளியில் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ஒன்றுகூடல்களுக்கு அனுமதி இல்லை.
  • 1ம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரை பாடசாலையினை ஜூன் மாதத்தில் ஆர்ம்பிக்க முயற்சிக்கப்படுகிறது.
  • யூலை மாதத்தில் உயர் வகுப்ப்பு மாணவர்களுக்கு பரீட்சைக்காக சில வாரங்கள் பாடசாலைகள் நடக்கவும் முயற்சிகள் இடம்பெறுகிறது.

இந்த அனுமதிகள் அனைத்தும் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் அமுலுக்கு வருவதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஏனெனில், இவை அனைத்தும் தற்போதுள்ள நோய் பரவல் நிலமையை கருத்தில் கொண்டு அமுல்படுத்தப்படுகிறது. சில வேளைகளில் நோய் பரவல் மீளவும் அதிகரிக்கும் பட்சத்தில் திரும்பவும் பழைய நிலைக்கு கொண்டுவரப்பட்டு இயல்பு நிலை முடக்கம் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளது. இது மக்களின் கைகளில், பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் அவர்கள் நடந்து கொள்ளும் முறையிலுமே தங்கியுள்ளது.

இதே வேளை, தற்போது ஏற்படுத்தப்படும் நெகிழ்வுத்தன்மை பொருளாதாரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டதல்ல. இது விஞ்ஞானத்தை மையப்படுத்தி எட்டப்பட்ட முடிவு என்றும் அவர் தெரிவித்தார்.

இது தவிர கொரோனா வைரஸ் தாக்கம் முற்றாக நீங்கும் வரை நாட்டுக்குள் வரும் பயணிகள் அனைவரும் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் எனும் சட்டம் விரைவில் அமுல்படுத்தப்படும் எனவும் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்தார்.