Home உலக செய்திகள் பிரித்தானியாவில் மேலும் 346 பேர் கொரோனா நோயினால் பலி – 3,896 நோயாளர் புதிதாக இனம்காணப்பட்டனர்:

பிரித்தானியாவில் மேலும் 346 பேர் கொரோனா நோயினால் பலி – 3,896 நோயாளர் புதிதாக இனம்காணப்பட்டனர்:

37
0

கொரோனா நோயின் காரணமாக பிரித்தானியாவில் இன்றும் 346 பேர் உயிரிழந்ததை அடுத்து கொரோனா நோயினால் ஏற்பட்ட உயிர் பலி எண்ணிக்கை 31,587 ஆக உயர்வடைந்துள்ளது.

இது தவிர கடந்த 24 மணித்தியாலங்களில் 3,896 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உள்ளமை கண்டுபிடிக்கபட்டதை அடுத்து இதுவரை பிரித்தானியாவில் கொரோனா நோயாளர் எண்ணிக்கை 215,260 ஆகவும் உயர்வடைந்துள்ளது.

இத் தரவுகள் யாவும் வைத்தியசாலை பதிவுகளுக்கு உட்பட்டவை என்பதும், இது தவிர பராமரிப்பு நிலையங்களிலும், வீடுகளிலும் கொரோனா நோயினால் இறந்தோர் எண்ணிக்கைகள் உள்ளடக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.