Home உலக செய்திகள் தமிழ் நாட்டில், மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்:

தமிழ் நாட்டில், மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்:

37
0

தமிழ்நாட்டில் (தமிழகத்தில்) மதுக்கடைகளை திறப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதோடு, தற்போது தமிழகத்தில் உள்ள இயல்புநிலை முடக்கம் முடியும் வரை மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு நாளை காலை முதல் அமுலுக்கு வரும் என அறிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், ஒன்லைன் மூலம் மதுபானம் விற்பனை செய்யலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

முன்னர – சென்னை உயர் நீதிமன்றம், சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்புடன் மதுபானம் விற்பனை செய்ய உத்தரவிட்டிருந்த நிலையில் நேற்று தமிழகத்தில் மதுபான விற்பனை நடைபெற்றது.

ஆனால் மதுபான விற்பனையின் போது, எந்தவித சமூக இடைவெளியும் பின்பற்றப்படவில்லை என இன்று அவசர வழக்கு தொடரப்பட்டு அதற்கான வழக்கு விசாரணையின் போது, மதுக்கடைகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை என நீதிபதியின் முன்பு வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

இதையடுத்தே, தமிழகத்தில் மதுக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.