Home தமிழகச் செய்திகள் இந்தியாவில் – கொரோனா பரவல் அதிகரிப்பால் 10 நாட்களுக்கு நீடிக்கப்படும் ஊரடங்கு சட்டம்:

இந்தியாவில் – கொரோனா பரவல் அதிகரிப்பால் 10 நாட்களுக்கு நீடிக்கப்படும் ஊரடங்கு சட்டம்:

53
0

இந்தியாவில் நாளாந்தம் கொரோனா நோயாளர் எண்ணிக்கை அதிகரித்தே செல்வதால் இன்று முதல் மேலும் 10 நாட்களுக்கு (மே 11 வரை) ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என இந்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுவரை நாடளாவியரீதியில் 1223 பேர் கொரோனா நோயினால் மரணமடைந்துள்ளதோடு, 37,336 பேர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 27 பேர் மரணமடைந்துள்ளதுடன், 2323 பேர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை இந்தியாவில் அதிகூடிய பாதிப்புக்குள்ளான மாநிலங்களாக

  • மஹாராஷ்ரா – பாதிக்கப்பட்டோர் 10,498 – உயிரிழந்தோர் 459
  • குஜராத் – பாதிக்கப்பட்டோர் 4,395 – உயிரிழந்தோர் 214
  • டில்லி – பாதிக்கப்பட்டோர் 3,515 – உயிரிழந்தோர் 59

ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலையிலேயே வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கோடு ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதோடு, மாநிலங்களவையில் தொற்று நீக்கு நடவடிக்கஇகளும், பரிசோதனைகளும் இடம்பெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.