Home தாயக செய்திகள் “கொரோனா” நோயாளர் அடுத்த இரு வாரங்களில் பல நூற்றுக்கணக்கில் அதிகரிக்கும்: எச்சரிக்கை!

“கொரோனா” நோயாளர் அடுத்த இரு வாரங்களில் பல நூற்றுக்கணக்கில் அதிகரிக்கும்: எச்சரிக்கை!

43
0

இலங்கையில் அடுத்த இரு வாரங்களில் “கொரோனா” நோயாளர் எண்ணிக்கை பல நூற்றுக்கணக்கில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வைத்திய பரிசோதனை சபையின் பணிப்பாணர் DR. Jeyaruwan Bandara தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் ஒருவர், இருவர் என நாட்டிற்குள் கண்டறியப்பட்ட “கொரோனா” நோயாளர் எண்ணிக்கை இன்று 129 ஆக அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் அவர்கள் தமக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதை அறியாது இயல்பு வாழ்க்கையை வாழ்ந்துவந்தமையே. இப்போது அவர்கள் நோ தொற்று உள்ளவர்களாக கண்டறிப்பட்டுள்ளனர்.

ஆனால் அவர்கள் இதுவரை வெளியில் சென்று வந்த இடங்களிஉம், பழகியவர்களுக்கும் இது தொற்றி இருக்கும், ஆகவே அடுத்த சில வாரங்களில் பல நூற்றுக்கணக்கில் இது அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ளது.

இதில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக கொழும்பு, புத்தளம், ஹம்பகா ஆகிய மாவட்டங்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆகவே அனைத்து மக்களும் நாட்டுச் சட்டத்தை மதித்து தனிமைப் படுத்தல்களை பின்பற்றுங்கள். இரண்டு மீற்றர் தூரத்திற்கு குறைவாக எவரையும் உங்களை நெருங்க விடாதீர்கள். எனவும் தெரிவித்தார்.