Home முக்கிய செய்திகள் ஐ.நா உடனான இணை அனுசரணையில் இருந்து இலங்கை வெளியேற அமைச்சரவை அங்கீகாரம்:

ஐ.நா உடனான இணை அனுசரணையில் இருந்து இலங்கை வெளியேற அமைச்சரவை அங்கீகாரம்:

14
0

ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கிவந்த இணை அனுசரணையில் இருந்து இலங்கை விலகுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் கொண்டுவரப்ப்அட்ட இத் தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2008, 2009 இல் ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ச, மற்றும் அப்போது பாதுகாப்பு செயலராக பணியாற்றிய கோட்டாபாய ராஜபக்ச ஆகியோரால் முன்னெடுக்கப்பட்ட இறுதி யுத்தத்தின் போது அப்பாவிப் பொதுமக்களையும், சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களையும் ஈவிரக்கமின்றி சித்திரவதைகள் செய்து படுகொலை செய்த குற்றச்சாட்டில் “போர்க்குற்றவாளிகளாக இனம் காணப்பட்டவர்களுள் ஒருவரான தற்போதைய பாதுகாப்பு செயலாளர் சவேந்திர சில்வாவிற்கு” அமெரிக்கா அந் நாட்டிற்கான பயணத் தடையை விதித்ததின் எதிரொலியாகவே இலங்கை ஐ.நா அனுசரணையில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த வேலையில் தமிழ் அரசியல்வாதிகள் சரியாக காய் நகர்த்தினால் சர்வதேசம் ஈழத் தமிழருக்கான நீதிக்கு உதவ வாய்ப்புக்கள் அதிகம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.