Home செய்திகள் யாழில் ஆரம்பித்து 12 நாட்களில் அம்பாறையை சென்றடைந்த மாற்றுத் திறணாளிகளின் சக்கர நாற்காலி பயணம்!

யாழில் ஆரம்பித்து 12 நாட்களில் அம்பாறையை சென்றடைந்த மாற்றுத் திறணாளிகளின் சக்கர நாற்காலி பயணம்!

13
0

மாற்றுத் திறனாளிகள் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தியும், மாற்றுத்திறனாளிகளின் 06 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தும் கடந்த முதலாம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து சக்கர நாற்காலி பயணம் நேற்று அம்பாறை அட்டாளைச்சேனை பிரதேசத்தை சென்றடைந்தது.

சமூக நல்லிணக்கம் வேண்டியும், எம்மைப்போன்று நாடு முழுவதிலுமுள்ள மாற்றுதிறனுடையோரின் சிறப்பான எதிர்காலம் குறித்து ஆறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மாற்றுத் திறனாளிகளான நாம் நாடு முழுவதும் சக்கர நாற்காலியில் வலம் வந்து கொண்டிருக்கின்றோம் என அவர்கள் தெரிவித்தனர்.

சக்கர நாற்காலியூடாக யாழ்ப்பாணத்லிருந்து கொழும்பு சென்று அவர்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளித்த தன் பின்னர் காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் அம்மாந்தோட்டை, மொனராகல ஊடாக பொத்துவிலில் இருந்து நேற்று அம்பாறை அட்டாளைச்சேனையை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர்களை, பொது மக்கள், இளைஞர்கள், சிவில் அமைப்புக்கள், விளையாட்டுக் கழகங்கள் சந்தித்து வரவேற்று ஆதரவு தெரிவித்துவருவதுடன் அவர்களுக்கான உதவிகளையும் வழங்கி வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றன.