Home செய்திகள் மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் மீட்பு!

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் மீட்பு!

7
0

மாங்குளம் வைத்தியசாலைக்கு அருகில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

புனர்வாழ்வு வைத்தியசாலை ஒன்றிற்கான நிர்மாண பணிகள் இடம்பெற்று வந்த நிலையில் குறித்த வளாகத்தில் மிதிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மனித நேய தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மிதிவெடி அகற்றும் பிரிவினர் தங்களது பணிகளை முன்னெடுத்திருந்த போதே மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது.

இதனை தொடந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதன் அடிப்படையில் மாவட்ட நீதவான் எஸ் லெனின்குமாருடன் பொலிஸார் மாங்குளம் வைத்தியசாலை வளாகத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

இறுதிக்கட்ட போராட்ட முடிவில் இராணூவத்தினரால் கொல்லப்பட்ட தமிழ் மக்களது, மற்றும் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினரது மனித எச்சங்கங்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.