Home உலக செய்திகள் $7.8 மில்லியன் மோசடி வழக்கில் இலங்கையர் ஒருவருக்கு பிரித்தானியாவில் சிறை!

$7.8 மில்லியன் மோசடி வழக்கில் இலங்கையர் ஒருவருக்கு பிரித்தானியாவில் சிறை!

113
0

7.8 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி வழக்கில் பிரித்தானியாவில் வசித்துவந்த இலங்கையர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 88 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

பிரித்தானியாவின் வடக்கு வேள்ஸ் பகுதியில் Gwynedd எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முன்னாள் முகாமையாளரான 41 வயதான michael kinnane என்பருக்கே குறித்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சந்தேகம் கொண்டு 10 வருடங்களாக michael kinnane பின் தொடர்ந்து அவதானித்து வந்த துபறியும் உரு மறைப்பு காவல்துறையினர் கடந்த ஆண்டு டுபாயில் இருந்து பிரித்தானியாவிற்கு திரும்பி வந்த michael kinnane ஐ Gatwick Airport இல் வைத்து கைது செய்திருந்தனர்.

கடந்த ஆறு மாதங்களாக இவர் மீது நடாத்தப்பட்ட விசாரணைகளில் இவர தவறை ஒப்புக்கொள்ளாத போதும் நேற்றைய தினம் Caernarfon Crown நீதிமன்றில் பிரித்தானிய காவல்துறையினரால் வழங்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் இடம்பெற்ற விசாரணைகளின் இறுதியில் michael kinnane தனது குற்றங்களை ஒப்புக்கொண்டத்அன் அடிப்படையில் நீதிபதி Nicola Jones இனால் குற்றவாளியான michael kinnane க்கு 88 மாதங்கள் (7 வருடங்கள்உம், 4 மாதங்களும்) சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

நிதி மோசடிக் குழுவினால் பங்கு அடிப்படையில் பிரித்தானியாவில் இயங்கும் மருந்து நிறுவனம் ஒன்றிற்கும், அமெரிக்காவில் உள்ள வர்த்தக நிறுவனம் ஒன்றிற்கும் இடையில் michael kinnane செயற்பட்டதாகவும், michael kinnane இன்றி இப் பெருந்தொகை நிதி மோசடி இடம்பெற்றிருக்காது எனவும் நீதிமன்றில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

michael kinnane லாண்ட் றோவர் வாகனம் உட்பட மூன்று வாகனக் கொள்ளவனவுகளில் #150,000 பவுண்ஸ்கள் மோசடி செய்துள்ளமையும் கண்டறிப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.