Home முக்கிய செய்திகள் மீள் குடியேற்றத்தில் மக்கள் ஆர்வம் இல்லாத போது காணி விடுவிப்பு சாத்தியம் இல்லை: யாழ்-இராணுவ தளபதி

மீள் குடியேற்றத்தில் மக்கள் ஆர்வம் இல்லாத போது காணி விடுவிப்பு சாத்தியம் இல்லை: யாழ்-இராணுவ தளபதி

44
0

விடுவிக்கப்பட்ட காணிகளில் மீள்குடியேற மக்கள் ஆர்வம் காட்டாத நிலையில் மேலும் காணிகளை விடுவிப்பதில் பயனில்லை என யாழ் மாவட்ட இராணூவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ரூவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

பலாலி இராணுவ முகாமில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து அங்கு ஊடகவியலாளர் ஒருவரால் காணி விடுவிப்பு தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நாம் காணிகளை விடுவிக்கவும், மக்களின் மீள் குடியேற்றத்திற்கும் தயாராகவே உள்ளோம். ஆனால் விடுவிக்கப்பட்ட காணிகள் பற்றைகள் நிறைந்து காணப்படுகிறது மக்கள் மீள் குடியேறவில்லை.

இராணுவத்தினரின் பாவனையில், அல்லது இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த காணிகளில் இதுவரை 8,800 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது. இருந்து அதில் அரைவாசிக்கு மேற்பட்ட சுமார் 4,770 ஏக்கர் காணிகளில் இதுவரை மக்கள் குடியேறவில்லை. அவை பற்றைக் காடுகளாக இருக்கின்றன.

இந் நிலையில் மேலும் காணிகளை விடுவிக்கக் கோருவதில் நியாயம் இல்லை. அதற்கு சாத்தியமும் இல்லை.

நாம் அறிந்தவரை பெரும்பாலான காணிகளின் உரிமையாளர்கள் வெளிநாடுகளில் அந்த நாட்டு குடியுரிமையுடன் வசதியாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு இங்கு குடியேறவோ, அல்லது வாழ்விடங்கள் இன்றி தவிக்கும் தமிழ் குடும்பங்களை கூட குடியேற்றவோ விருப்பம் இல்லை.

ஆகவே காணிகளை விடுவித்து அவை பற்றைக்காடுகளாக காணப்படுவதஇயும், அதனூடாக பாதுகாப்பிறு அசுறுத்தல் வருவதையும் நாம் விரும்பவில்லை. எனவே விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் குடியேற்றம் நடைபெற்றால் நாம் மேலதிக காணிகளை விடுவிப்பதஇ பற்றி யோசிக்கலாம் என்றார்.