Home உலக செய்திகள் பிரித்தானியாவில் மீண்டும் மக்கள் மீது கத்திக் குத்து – தாக்குதல் தாரி சுட்டுக் கொலை!

பிரித்தானியாவில் மீண்டும் மக்கள் மீது கத்திக் குத்து – தாக்குதல் தாரி சுட்டுக் கொலை!

53
0

பிரித்தானியாவின் தென்மேற்கு லண்டன் பகுதியில் பொது மக்களை கத்தியால் குத்தி கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பிரித்தானியப் பொலிஸார் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றூள்ளனர்.

தென்மேற்கு லண்டன் பகுதியின் Streatham High Road இல் Iceland பல்பொருள் அங்காடிக்கு முன்பாக நேற்றையதினம் மாலை 2:00 மணிக்கு இடம்பெற்ற இச் சம்பவத்தில் 20 வயதுடைய Sudesh Amman என்ற நபரே சுட்டுக்கொல்லப்பட்டவராவார்.

குறித்த பயங்கரவாத தாக்குதலில் பலர் கத்தியால் குத்தப்பட்டுள்ளதாகவும், சம்பவ இடத்திற்கு வரவலைக்கப்பட்ட அவசர முதலுதவி காவுவண்டிகளின் துணையுடன் முதலுதவி அளிக்கப்பட்டு தொடர்ந்து அவர்களுக்களுக்கான சிகிச்சைகள் வைத்தியசாலைகளில் இடம்பெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இத் தாக்குதல் இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையதாக தெரிவித்துள்ள லண்டன் பொலிஸார். குறித்த தாக்குதல் தாரி ஏற்கனவே 13 குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட நிலையில் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் இருந்தவர் எனவும், ஒரு வாரத்தின் முன்னரே விடுதலையானவர் எனவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு இறுதியிலும் பிரித்தானியத் தலை நகர் லண்டனின் “லண்டன் பிறிட்ஜ்” பகுதியில் மக்கள் மீது கத்திக்குத்து நடாத்தப்பட்டதும். தாக்குதல் நடாத்தியவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.