Home செய்திகள் தேசிய மட்டத்தில் சாம்பியனானது மகாஜனா கல்லூரி பெண்கள் உதைபந்தாட்ட அணி!

தேசிய மட்டத்தில் சாம்பியனானது மகாஜனா கல்லூரி பெண்கள் உதைபந்தாட்ட அணி!

53
0

தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி வீராங்கனைகள், தேசிய மட்டத்திலான இருபது வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் வென்று மகுடம் சூட்டியுள்ளனர்.

கொழும்பு சிற்றிலீக் உதைபந்தாட்ட மைதானத்தில் நேற்று (19/12) வியாழக்கிழமை 11:00 மணிக்கு இடம்பெற்ற சுற்றில் 1 – 0 என்ற அடிப்படையில் பொல்காவலை பராக்கிரமபாகு மத்திய மகாவித்தியாலய அணியை தோற்கடித்து தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி 2019ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை சம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.