Home செய்திகள் தெற்காசிய போட்டியில் சாதனை நிலைனாட்டிய யாழ் வீராங்கனை ஆர்ஷிகா!

தெற்காசிய போட்டியில் சாதனை நிலைனாட்டிய யாழ் வீராங்கனை ஆர்ஷிகா!

48
0

நேபாளத்தில் இம் மாதம் முதலாம் திகதி முதல் பத்தாம் திகதிவரை இடம்பெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பளுதூக்கலில் வெள்ளிப் பதக்கம் வென்ற விஜயபாஸ்கர் ஆசிகாவுக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்று துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் யாழ் மாநகர மேயர்,பயிற்சிவிப்பாளர்கள்,ஆசிகாவின் தந்தை ,நண்பர்கள் ,பொதுமக்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நோபாளத் தலைநகர் காத்மண்டுவில் நடந்து முடிந்த தெற்காசிய போட்டிகளில், 64 கிலோ எடைப்பிரிவில் போட்டியில் பங்கேற்ற ஆர்ஷிகா, வெள்ளிப்பதக்கத்தை வென்றதுடன், இலங்கையின் முன்னைய சாதனையையும் புதுப்பித்துள்ளார்.

சுண்டிக்குளி மகளிர் கல்லூரியின் பழைய மாணவியான யாழ்ப்பாணத்தை சேர்ந்த யாழ் வீராங்கனை ஆர்ஷிகா (விஜயபாஸ்கர் ஆர்ஷிகா) வுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணமுள்ளமை குறிப்பிடத்தக்கது.