Home செய்திகள் ஒரு வாரத்திற்கு மேலாக தொடரும் மழையால் வெள்ள அனர்த்த எச்சரிக்கை! இதுவரை 1156 குடும்பங்கள் பாதிப்பு!

ஒரு வாரத்திற்கு மேலாக தொடரும் மழையால் வெள்ள அனர்த்த எச்சரிக்கை! இதுவரை 1156 குடும்பங்கள் பாதிப்பு!

9
0

நாட்டில் நிலவும் தொடர் மழைக்காரணமாக வெள்ளப் பெருக்குகள் ஏற்பட்டுள்ள நிலையில் மக்களை அதவானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.

வடக்கு மாகாணத்திலும் பெரும்பாலான பகுதிகள் வெள்ளம் நிறைந்து நிற்பதை காண முடிகிறது. அண்மை காலமாக. அடக்கிக் அதிகரித்துள்ள டெங்கு நோயின் தாக்கும் இச் சீரற்ற கால நிலை, மற்றும் தேங்கிய வெள்ளங்களால் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதேவேளை, 12 மாவட்டங்களில் தொடரும் மண்சரிவு, பலத்த மழை, வெள்ளப் பெருக்கு, மின்சார தடை உள்ளிட்ட அனர்த்தம் காரணமாக 1,156 குடும்பங்களைச் சேர்ந்த 4,126 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவது தொடர் மழை கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இருந்து வரும் நிலையில் தென்னிலங்கை பகுதியை சேர்ந்த கம்பஹா, நீர்கொழும்பு, மினுவாங்கொடை மற்றும் ஜாஎல ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.