Home உலக செய்திகள் லண்டனில் கத்திக் குத்து – இருவர் பலி! தாக்குதல் நடாத்தியவரை சுட்டுக் கொன்ற காவல்துறை!!

லண்டனில் கத்திக் குத்து – இருவர் பலி! தாக்குதல் நடாத்தியவரை சுட்டுக் கொன்ற காவல்துறை!!

33
0

பிரித்தானியத் தலைநகர் லண்டனில் உள்ள London Bridge இல் நபர் ஒருவர் திடீரென பொது மக்கள் மீது மேற்கொண்ட கத்திக் குத்திற்கு இலக்காகி இருவர் பலியாகியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு உடன் விரைந்த ஆயுதம் தாங்கிய காவல்துறையினர் குறித்த தாக்குதல் தாரியை சுட்டுக் கொன்றனர்.

குறித்த தாக்குதல் தாரி கையில் வைத்திருந்த இரு கத்திகளினாலும் மக்கள் மீது தாக்குதல் நடாத்திய வேளை துணிகரமாக ஒருவர் அவரை மடக்கி பிடித்து தாக்குதலை தடுத்து கடுமையாக போராடிக் கொண்டிருந்த வேளையே அங்கு விரைந்த காவல்துறையினர் தாக்குதல் தாரியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.

குறித்த தாக்குதல் தாரி 28 வயதுடைய Usman Khan அடையாளம் காணப்பட்டுள்ளஅர். இவர் 2012 ஆம் ஆண்டு ஒரு ஆணையும், பெண்ணையும் கத்தியால் குத்திய குற்றச்சாட்டில் வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் என்றும் கடந்த 2017 ஆம் ஆண்டு காலில் கண்காணிப்பு வளையம் மாட்டப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டவர் எனவும் பிரித்தானியக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இன்னும் இரண்டு நாட்களே பிரித்தானியப் பொதுத்தேர்தலுக்கு இருக்கும் நிலையில் இடம்பெற்ற இச் சம்பவம் ஆட்சியாளர்களை மேலும் சிக்கலுக்குள் தள்ளியுள்ளது.

குறித்த சம்பவத்தால் மக்கள் மத்தியில் பெரும் அச்ச நிலமை தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.