Home செய்திகள் ஈழத்து கலைஞர் சகாதேவன் காலமானார்!

ஈழத்து கலைஞர் சகாதேவன் காலமானார்!

25
0

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஈழத்து கிற்றார் வாத்தியக் கலைஞர் சகாதேவன் அவர்கள் சுகயீனம் காரணமாக நேற்று முந்தினம் (28/11) காலமானார்.

இலங்கையின் கண்ணன் கோஷ்ரி, கீதாலயம், கலாலயம், மண்டலேஸ்வரன்,ராஜன்ஸ் ஆகிய இசை க்குழுக்களில் கிற்றார் வாத்தியக்கலைஞராக விளங்கிப் பல்லாயிரக்கணக்கான இசைப் பிரியர்களை மகிழ்வித்தவர்.

ஆரம்பத்தில் ‘லீட்’,’றிதம்’ என வாசித்து வந்தவர் பின்னாட்களில் ‘பேஸ்’ வாசித்து வந்தார்.
இவரின் கிற்றார் வாசிப்பைப் பார்த்து பலர் கிற்றார் வாத்தியம் இசைக்க ஆர்வங் கொண்டார்கள்.

1966 காலகட்டத்தில் MR.Jaffna வாக விளங்கிய பெருமைக்கும் உரியவர் சகாதேவன்.

இசைக்கலைஞர் சகாதேவன் அவர்களின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 03.12.2019 திங்கட்கிழமை பருத்தித் துறையில் அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது.