Home செய்திகள் வவுனியா மாணவி றோகிதா கண்டுபிடித்த இரத்தத்தினை தானியங்கி முறையில் நோயாளர்களிடம் பெறும் ரோபோ இயந்திரம்!

வவுனியா மாணவி றோகிதா கண்டுபிடித்த இரத்தத்தினை தானியங்கி முறையில் நோயாளர்களிடம் பெறும் ரோபோ இயந்திரம்!

11
0

வவுனியா- சைவபிரகாச மகளிர் கல்லூரி மாணவியான ரோகிதா புஸ்பதேவன் அவர்கள் இரத்தப்பரிசோதனைக்காக இரத்தத்தினை தானியங்கி முறையில் நோயாளர்களிடம் பெறும் ரோபோ இயந்திரத்தினை கண்டு பிடித்துள்ளார்.

மாகாண மட்டத்தில் இடம்பெற்ற போட்டியில் பங்கேற்பதற்காக பாடசாலை அதிபர் திருமதி பி.கமலேஸ்வரியின் ஒத்துழைப்புடனும் பாடசாலை ஆசிரியர்களின் துணையுடன் கழிவுப்பொருட்கள் என பயன்படுத்தாது எறியப்பட்ட பொருட்களை கொண்டு ரோபோ ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் குறித்த மாணவி ஈடுபட்டிருந்தார்.

யுத்தம் காரணமாக 2009 ஆம் ஆண்டு களமுனையில் தனது தந்தையை இழந்த இம் மாணவி தாயாரின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தபோதிலும் விஞ்ஞான தொழில்நுட்ப பாடத்தினை மிகுந்த ஆர்வத்துடன் கற்றுவருகின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

போதியளவு நிதிவசதிகள் இல்லாமையினால் அதிபரினூடாக பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் மூலம் சிறு தொகை பணத்தினை பெற்று தனது முயற்சியை ஆரம்பித்திருந்த குறித்த மாணவி முடிவில் இரத்தபரிசோதனைக்காக இரத்தத்தினை நோயாளியிடம் இருந்து பெறுவதற்கான தானியங்கி முறைமையை  (AUTO NEEDELINJECTOR)  கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளதோடு, தமிழர்களுக்கும், அப் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.