Home உலக செய்திகள் பிரித்தானியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாவீரர் நாள் நிகழ்வுகள்!

பிரித்தானியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாவீரர் நாள் நிகழ்வுகள்!

36
0

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம்மை ஆகுதியாக்கிய தேசப் புதல்வர்களான மாவீரர்களை நினைவு கொள்ளும் “மாவீரர் நாள்” நிகழ்வுகள் பிரித்தானியாவில் மூன்று இடங்களில் இடம்பெற்று வருகிறது.

முதலாவதாக இன்று காலை 9:00 மணிக்கு வடமேற்கு லண்டனில் அமைந்துள்ள ஈகைப்பேரொளி முருகதாசன் உட்பட்ட 21 தியாகிகள் நினைவுக் கல்லறை முன்பாக சிறப்பு வணக்க நிகழ்வு இடம்பெற்றது.

அங்கு மாவீரர் வீரவேங்கை மலர் அவர்களின் சகோதரன் நாதன் அவர்கள் பிரதான சுடரினை ஏற்ரி வைத்தார்.

தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டதை அடுத்து, முருகதாசனுக்கான ஈகச்சுடரினை அவரது சகோதரன் ஏற்றி வைக்க மலர் மாலையினை தாயார் அணிவித்தார்.

21 தியாகிகளுக்குமான ஈகச்சுடரினை வீரத் தமிழர் முன்னணியைச் சேர்ந்த பாவு அவர்கள் ஏற்றி வைக்க, மலர் மாலையினை தமிழ் உணர்வாளர் திரு.றஞ்சன் அவர்கள் அணிவித்தார்.

தொடர்ந்து தேசப்பற்றாளரும், தமிழ் உணர்வாளருமான மனித நேயச் செயற்பாட்டாளர் செல்வி. அம்பிகை சீவரட்ணம் அவர்கள் மலர்வணக்கத்தினை ஆரம்பித்துவைக்க மக்கள் அனைவரும் மாவீரர்களுக்கு மலர்தூவி, விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்வுகளின் இறுதியாக உறுதியேற்போடு 10:00 மணிக்கு நிகழ்வுகள் நிறைவு பெற்றது.

இதேவேளை, Oxford பகுதியில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்திலும், கிழக்கு லண்டன் பகுதியில் அமைந்துள்ள Excel மண்டபத்திலும், எழுச்சி பூர்வமாக ஆயிரக்கணக்கான மக்களோடு மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற்றன.