Home முக்கிய செய்திகள் கிட்டு பூங்காவில் இடம்பெற்ற கூட்டமைபின் பிரச்சாரக் கூட்டம்!

கிட்டு பூங்காவில் இடம்பெற்ற கூட்டமைபின் பிரச்சாரக் கூட்டம்!

27
0

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நேற்று (13/11) புதன்கிழமை மாலை கிட்டு பூங்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கான மாபெரும் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றது.

ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு திரட்டும் முகமாக வடக்கு மாகாண சபையின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இக் கூட்டம் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில், சஜித்திற்கு ஆதரவான பிரச்சாரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், உலகத் தமிழர் பேரவையின் தலைவர் எஸ்.ஜே.இம்மானுவல் அடிகளார், இங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், புளொட் அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டு அதரவு கோரியிருந்தனர்.

இலங்கையின் 8வது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான ஜனாதிபதி தேர்தலின்கி இறுதிப் பிரச்சார கூட்டமான இக் கூட்டத்தில் பெருமளவான பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.