Home செய்திகள் பிள்ளையானை விடுவிப்போம் என மகிந்த ராஜபக்ச கூறியிருப்பதானது நீதித்துறையை நேரடியாக கையாள்வோம் என்பதை வெளிக்காட்டுகிறது:

பிள்ளையானை விடுவிப்போம் என மகிந்த ராஜபக்ச கூறியிருப்பதானது நீதித்துறையை நேரடியாக கையாள்வோம் என்பதை வெளிக்காட்டுகிறது:

6
0

கொலைக் குற்றச்சாட்டில் சிறையில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண  முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானை ஆட்சிக்கு வந்ததும் விடுவிப்போம் என மகிந்த ராஜபக்ச கூறியிருக்கின்றார். இந்த கருத்து நாம் ஆட்சிக்கு வந்ததும் நீதித்துறையை நேரடியாக கையாள்வோம் என்பதை வெளிக்காட்டுகிறார் என வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்துக்கு தேர்தல் பிரச்சராத்திற்காக சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சிறையில் உள்ள பிள்ளையானை சந்தித்ததுடன் தாம் ஆட்சிக்கு வந்ததும் அவரை விடுவிப்போம் என கூறிய கருத்து தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துக்களை பகிரும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

படுகொலை குற்றச் சாட்டில் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் ஊடாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவ்வாறு நீதிமன்றின் ஊடாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையானை மகிந்த தாம் ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக விடுதலை செய்வேன் எனக் கூறியுள்ளார். அப்படியாயின் இதன் ஊடாக இந்த நாட்டு மக்களுக்கு எண்ணத்தை கூற முனைகின்றார். நீதிமன்றின் ஊடாக பிள்ளையான் விசாரணைகளின் ஊடாக விடுதலை செய்யப்படுவார் என்கிறாரா?அல்லது தங்கள் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்று அதிகாரத்தின் ஊடாக அவரை விடுதலை செய்வோம் என்கின்றார்?அவ்வாறு நிறைவேற்று அதிகாரத்தின் ஊடாக சிறையில் உள்ள பிள்ளையானை விடுதலை செய்வோம் என்பாராயின் மகிந்த ராஜபக்ச தரப்புக்கள் ஆட்சிக்கு வந்ததும் நீதித்துறையை நேரடியாக நாம் கையாள்வோம் என்பதை வெளிக்காட்டுகின்றனர்.

இதுமட்டுமல்லாது ஜனாதிபதி வேட்ப்பாளராக களமிறங்கியுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சவும் தாம் ஆட்சிக்கு வந்தால் சிறைகளில் உள்ள இராணுவத்தினரை விடுவிப்போம் என்று கூறுகின்றார். சிறையில் உள்ள இராணுவத்தினர் நீதிமன்றின் ஊடாகவே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எனவே இவர்கள் ஆட்சிக்கு வரமுன்னரே இவ்வாறான கருத்துக்களை கூறுவது நீதித்துறையை கேள்விக்கு உள்ளாக்கும். சிறையில் உள்ள பிள்ளையானாக இருந்தாலும் சரி இராணுவத்தினராக இருந்தாலும் சரி அவர்கள் நீதித்துறை ஊடாக விடுதலை செய்யப்பட வேண்டும் அதனை விடுத்து நிறைவேற்று அதிகாரத்தை இதற்கு பாவிக்க நினைப்பது ஜனநாயக ஆட்சியாக அமையாது என்றார்.