Home செய்திகள் இஸ்லாம் தீவிரவாதத்தையும், தாக்குதலையும் ஆதரித்து பேசிய மெளலவி பிணையில் விடுதலை!

இஸ்லாம் தீவிரவாதத்தையும், தாக்குதலையும் ஆதரித்து பேசிய மெளலவி பிணையில் விடுதலை!

11
0

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றநிலையில் அதற்கு ஆதரவாக சர்ச்சைக்குரிய காணொளி ஒன்றினை பேஸ்புக் மூலமாக வெள்ளியிட்டிருந்த மௌலவி எம்.கே.முனாஜித்திற்கு வவுனியா மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

வவுனியா செட்டிக்குளத்தைச் சேர்ந்த குறித்த மௌலவி தற்கொலை தாக்குதல் நடைபெற்ற நாளில் மத்திய கிழக்கு நாடொன்றில் தங்கியிருந்தநிலையில், அங்கிருந்தவாறே பேஸ்புக் மூலமாக குறித்த காணொளியை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த மே மாதம் 11ம் திகதி அவர் நாடு திரும்பிய போது கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யபட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் ஜந்து மாதங்களிற்கு பின்னர் வவுனியா மேல் நீதிமன்றால் அவருக்கு பிணை வழங்கப்பட்டு, நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.