Home செய்திகள் 1987ஆம் ஆண்டு இந்திய படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 30 பொதுமக்களுக்கு அஞ்சலி!

1987ஆம் ஆண்டு இந்திய படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 30 பொதுமக்களுக்கு அஞ்சலி!

14
0

மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி பகுதியில் 1987ஆம் ஆண்டு இந்திய படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 30 பொதுமக்களின் நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.

படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் நினைவுத் தூபியருகே இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் தலைமையில் நினைவுகூரல் நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்கள் நினைவு கூரப்பட்டனர். இந்த நிகழ்வில் களுவாஞ்சிகுடி பிரதேச பொதுமக்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

23-10-1987ஆம் ஆண்டு களுவாஞ்சிகுடியில் இந்திய படையினரால் பட்டிருப்பு தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவருமான இராசமாணிக்கத்தின் மகனான சக்கரவர்த்தி உட்பட 30 பொதுமக்களை இந்திய இராணுவத்தினர் சுட்டுக்கொலை செய்தனர்.

இந்திய இராணுவத்தினரை இலக்கு வைத்து கண்ணிவெடி தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என 30பேர் கொல்லப்பட்டனர்.