Home உலக செய்திகள் பிரான்ஸில் – தாக்குதலுக்கு இலக்காகி யாழ் இளைஞன் பலி!

பிரான்ஸில் – தாக்குதலுக்கு இலக்காகி யாழ் இளைஞன் பலி!

17
0

பெரியதாயாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக டென்மார்க்கிலிருந்து பிரான்சுக்குச் சென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் அடையாளம் தெரியாதவர்களின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் உடுவில் பகுதியைச் சேர்ந்த றொனால்ட்டன் (வயது 33) என்பவர் டென்மார்கில் வசித்து வருகிறார். அவருடைய பெரிய தாயார் பிரான்ஸின் பாரிஸ் நகரில் வில்நெப் சென்ஜோர்ச் பகுதியில் அண்மையில் காலமாகியிருந்தார். பெரிய தாயாரின் இறுதிச் சடங்கில் பங்குகொள்வதற்காக றொனால்ட்டனும் குடும்பத்தினரும் பிரான்ஸ் சென்றிருந்தனர்.

இறுதிச்சடங்கில் கலந்து கொண்டிருந்தவர்கள் இரவு 3 மணியளவில் வெளியில் சென்றிருந்ததாகவும் வீட்டிற்கு சமீபமாக உள்ள பெற்றோல் நிலையப் பகுதியில் நின்றிருந்த வேளை தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

ஒரு வாரம் வைத்தியசாலையில் கோமா நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்றுமுன்திதினம் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலத்தினை பிரான்ஸ் பொலிஸார் டென்மார்க் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். மரணத்துக்கான காரணம் பொலிஸாராலும் கண்டுபிடிக்கமுடியவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

குறித்த குடும்பஸ்தர் இரண்டு வயது பிள்ளையின் தந்தை என்பதுடன் அவருடைய துணைவியார் நிறைமாதக் கர்ப்பவதி என்றும் தெரியவருகிறது.

(நிருபர்: ஜெ.தீபன்)