Home செய்திகள் ஊழல், மோசடிகள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பிரதமர் ரணில்:

ஊழல், மோசடிகள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பிரதமர் ரணில்:

14
0

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையாகவுள்ளார்.

மத்தளை விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டதால், அங்குள்ள சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே அதுதொடர்பான விசாரணைகளுக்காக இன்று (23/10) புதன்கிழமை பிரதமர் முன்னிலையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் ஜனாதிபதி ஆணைக்குழு தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.