Home முக்கிய செய்திகள் கோட்டாபாயவிற்கு எமது ஆதரவு ஒரு போதும் இல்லை – சஜித் இற்கே ஆதரவு: ஈரோஸ் அமைப்பு!

கோட்டாபாயவிற்கு எமது ஆதரவு ஒரு போதும் இல்லை – சஜித் இற்கே ஆதரவு: ஈரோஸ் அமைப்பு!

46
0

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் செய்கின்றோம் என்ற போர்வையில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களின் உயிர்களின் அழிவுக்கும் யுத்தமீறல் குற்றச்சாட்டுகளுக்கும் பொறுப்புக்கூற ஆளாகியிருக்கும் பொதுஜன முன்னணியின் வேட்பாளர் கோத்தபாயா ராஜபக்சவுடன் தாம் தேர்தல் பற்றிய எவ்வித பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்ளப் போவதில்லை என ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளர் இராஜரெட்னம் இராஜேந்திரா தெரிவித்துள்ளார்.

ஈரோஸ் அமைப்பின் வெகுஜன முன்னணியான ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுக்குழு உறுப்பினர்களில் 16 பேற் கொண்ட குழுவினர் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில சந்தித்து எதிர்வரும் தேர்தலில் தமது நிலைப்பாடுபற்றி கலந்துரையாடியுள்ளனர்.

குறித்த கலந்துரையாடலில் தொடர்பாக இன்று (22/10) செவ்வாய்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பட்டார்.

வடக்கு, கிழக்கு, மலையகம் சார்ந்த தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் அரசியல் மற்றும் சமூக, பொருளாதார, கலாச்சாரம் சம்பந்தமான பிரச்சினைகள் பற்றிய தமது எதிர்பார்ப்புக்களை எடுத்துரைத்து அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொள்வது தொடர்பாக ஜனாதிபதி வேட்பாளரின் நிலைப்பாட்டை கேட்டறிந்ததுடன் அவர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக ஈரோஸ் அமைப்பின் பொதுக்குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடி தேர்தலில் அவருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பான இறுதி முடிவை விரைவில் வெளியிடவுள்ளோம்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் செய்கின்றோம் என்ற போர்வையில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களின் உயிர்களின் அழிவுக்கும் யுத்தமீறல் குற்றச்சாட்டுகளுக்கும் பொறுப்புக்கூற ஆளாகியிருக்கும் பொதுஜன முன்னணியின் வேட்பாளர் கோத்தபாயா ராஜபக்சவுடன் தாம் தேர்தல் பற்றிய எவ்வித பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்ளப் போவதில்லை. கோத்தபாயா ராஜபக்சவின் வெற்றி வாய்ப்பு குறைவாகவுள்ள ஏனைய வேட்பாளர்களுடன் தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் பற்றிப் பேசுவதென்பது அவர்களின் வாக்குகளை சிதறடிக்கும் என்பதால் அதனைத் தற்போதைக்கு தவிர்த்துக் கொண்டுள்ளோம் என முடிவெடுத்துள்ளோம் எனவும் ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளர் இராஜரெட்னம் இராஜேந்திரா கூறினார்.