Home செய்திகள் யாழ் வைத்தியசாலை படுகொலையின் 32வது ஆண்டு நினைவு இன்று:

யாழ் வைத்தியசாலை படுகொலையின் 32வது ஆண்டு நினைவு இன்று:

13
0

1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் 21ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் இந்தியப் படைகளால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 21 மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட 68 பொதுமக்களின் 32வது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

இதனை முன்னிட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணிப்பாளர் தலைமையில் இன்று நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்வில் மருத்துவர்கள், மருத்துவ சேவையாளர்கள் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.

தமிழர் தாயகத்தில் இந்தியப் படைகள் அரங்கேற்றிய பல படுகொலைச் சம்பவங்களில் ஒன்றான யாழ் வைத்தியசாலைப் படுகொலை என குறிப்பிடப்படும் இச் சம்பவத்தில் இரண்டு நாள்களாக வைத்தியசாலை ஆக்கிரமித்து வைத்திருந்த இந்தியப் படைகள், சிகிச்சை பெற்றுவந்த 47 நோயாளர்களையும், அங்கு பணியில் இருந்த மூன்று மருத்துவர்கள், இரண்டு தாதியர்கள், உள்ளிட்ட 21 மருத்துவ சேவையாளர்கள் உட்ளடங்கலாக மொத்தம் 68 தமிழர்களைக் ஈவிரக்கமின்றி கொன்று குவித்து கொலைவெறித் தாண்டவம் ஆடியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.