Home செய்திகள் மூன்றாம் தடவையாக இணக்கப்பாட்டிற்கான முயற்சியில் யாழ், பல்கலை மாணவர் ஒன்றியம்!

மூன்றாம் தடவையாக இணக்கப்பாட்டிற்கான முயற்சியில் யாழ், பல்கலை மாணவர் ஒன்றியம்!

72
0

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நேற்று மூன்றாவது தடவையாக இடம்பெற்ற சந்திப்பின் போது 6 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பின் நிலைப்பாட்டை தமிழ் தேசியத்தை முன்னிலைப்படுத்தி செயற்படும் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் கூட்டாக இணைந்து முன்வைப்பதற்கான இணக்கப்பாடு எட்டப்படும் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் கட்சிகளின் கோரிக்கைகளுக்கு அமைய தமிழர் தரப்பின் பொதுவான கோரிக்கைகளை உள்ளடக்கிய இறுதி ஆவணம் தயாரிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கமைய இன்று கட்சி தலைவர்கள் குறித்த ஆவணத்தில் கையொப்பம் இடுவார்கள் என்றும் சந்திப்பில் கலந்து கொண்ட கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.இந்த சந்திப்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் வலி வடக்கு பிரதேச சபையின் தலைவர் சோ. சுகிர்தன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் சட்டத்தரணி சுகாஸ் கனகரட்ணம், தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் க. அருந்தவபாலன், புளொட் சார்பில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், ஈ.பி.ஆர்.எல்.எஃவ் சார்பில் அதன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், ரெலோ சார்பில் அதன் செயலாளர் நாயகம் சட்டத்தரணிஎன். சிறீகாந்தா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதற்கமைய இன்று பொது இணக்கப்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் இந்த கட்சிகள் கைச்சாத்திட உள்ளதுடன், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களிடமும், வெளிநாட்டு துாதரகங்களிடமும் தமிழர் தரப்பின் கோரிக்கைகளை கூட்டாக முன்வைத்து பேரம் பேசுவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.