Home தாயக செய்திகள் முன்னாள் போராளியின் மனைவியும், சகோதரியும் கைது – கிளிநொச்சியில் சம்பவம்!

முன்னாள் போராளியின் மனைவியும், சகோதரியும் கைது – கிளிநொச்சியில் சம்பவம்!

28
0

நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்ட, முன்னாள் புலிஉறுப்பினரின் வீட்டில் இருந்த, கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியின் மனைவியும், அவரது சகோதரியும் சிறீலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி அம்பாள் குளத்தில் அமைந்துள்ள அவரது வீட்டை நேற்று காவல்துறையினர் சோதனையிட்ட போது அங்கிருந்து ரி56 ரக துப்பாக்கி 1, சிறிய ரக துப்பாக்கிகள் 3, கைக்குண்டுகள் 5, ரி 57 துப்பாக்கி ரவைகள் 150, சிறிய ரக துப்பாக்கி ரவை 45, மடிக்கணினி 1, தொலைபேசிகள் 4, எம் கே.எம் ஜி ரவைகள் 6, வெடிப்பு கருவிக்கான வயர்கள், வெடிப்பு கருவிகள் 4, ஜிபிஎஸ் 1, தானியக்கிகள் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினரால் தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையிலேயே கைதான குறித்த போராளியின் வீட்டில் இருந்த மனைவியும், அவரது சகோதரியும் கைதாகியுள்ளனர்.

திருகோணமலை – சேருநுவர பகுதியில் நேற்றுமுன்தினம் குறித்த முன்னாள் புலிஉறுப்பினர் கைதாகியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.