Home செய்திகள் யாழ் மாவட்ட மீனவர்கள் 18 பேர் இந்திய கடற்படையினரால் கைது!

யாழ் மாவட்ட மீனவர்கள் 18 பேர் இந்திய கடற்படையினரால் கைது!

15
0

இலங்கை – யாழ்ப்பாண மாவட்ட மீனவர்கள் 18 பேரை நேற்று முன்தினம் அதிகாலை இந்தியக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கடற் தொழிலுக்காக , யாழ்ப்பாணம் எழுவை தீவில் இருந்து ஆறு படகுகளில் புறப்பட்ட12 மீனவர்களும், பருத்தித்துறை சக்கோட்டையில் இருந்து ஒரு படகில் புறப்பட்ட 3 மீனவர்களும், மயிலிட்டியில் இருந்து ஒரு படகில் புறப்பட்ட 3 மீனவர்களுமாக மொத்தம் 18 மீனவர்களை இந்திய கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை மீட்டுத் தருமாறு யாழ்ப்பாணம் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் எழுத்து மூலம் கடற்றொழில் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.