Home செய்திகள் இறுதி முடிவிற்காக அவசரமாக இன்று கூடுகிறது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு!

இறுதி முடிவிற்காக அவசரமாக இன்று கூடுகிறது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு!

28
0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அவரது உத்தியோக பூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளது.

இன்று கூடும் மத்திய செயற்குழு கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி களமிறங்குவதா அல்லது ஆதரவளிப்பதா என்பது குறித்து தீர்க்கமான முடிவொன்று எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந் நிலையில் கோட்டபாயவை ஆதரிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், ஆனால் பொதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னத்தை ஏற்கமுடியாது எனவும் மைத்திரிபால சிறீசேன கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.