Home செய்திகள் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க மைத்திரி முடிவு:

தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க மைத்திரி முடிவு:

25
0

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 20 ஆம் திகதி முன்னிலையாகி சாட்சியம் அளிக்கவுள்ளதாக நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் அல்லது ஜனாதிபதி உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் சாட்சி பதிவுகளை, மேற்கொள்வார்களென தெரிவிக்கப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இதுவரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, சட்டம் மற்றும் ஒழுங்குகள் முன்னாள் அமைச்சர்களான சாகல ரத்னாயக்க மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரிடமும் சாட்சிப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.