Home செய்திகள் நானே ஜானாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன்: பிரதமர் ரணில்

நானே ஜானாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன்: பிரதமர் ரணில்

12
0

அடுத்த அதிபர் தேர்தலில் தாமே போட்டியிடுவதற்கு விரும்புவதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்று காலை அலரிமாளிகையில் நடைபெற்ற கூட்டத்தின் போதே ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களிடம் பிரதமரும், கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இங்கு உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க,” நானே அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன். நான் தான் கட்சியின் தலைவர். எனவே, போட்டியிடுவதற்கான முழு உரிமையும் எனக்கு உள்ளது. அதற்கு தேவையான ஒத்துழைப்பை உங்களிடம் இருந்து எதிர்பார்பார்க்கிறேன். செயற்குழுவின் அங்கீகாரத்துக்காக எனது நியமனத்தை சமர்ப்பிப்பேன். யாராவது அதனை எதிர்ப்பதாயின், அங்கு அவ்வாறு செய்யலாம்.” என்று கூறினார்.

இதன்போது, சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் மூத்த தலைவர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்தை ஏற்கவில்லை. அங்கு கருத்து வெளியிட்ட சஜித் ஆதரவாளர்களான அமைச்சர்கள் கபீர் காசிம், மலிக் சமரவிக்ரம ஆகியோர்,  இது கட்சியைப் பிளவுபடுத்தும் என்று கூறினர்.

எனவே, இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு, ரணில் விக்ரமசிங்கவும், சஜித் பிரேமதாசவும், நாளை சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.