Home செய்திகள் ஆளுநரின் உறுதி மொழியை அடுத்து நிறைவுக்கு வந்தது சுகாதாரத் தொண்டர்கள் போராட்டம்:

ஆளுநரின் உறுதி மொழியை அடுத்து நிறைவுக்கு வந்தது சுகாதாரத் தொண்டர்கள் போராட்டம்:

18
0

யாழ்.சாவகச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சுகாதாரத் தொண்டர்களில் ஒருவர் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்ட முயற்சித்ததால் அப்பகுதியில் ஏற்பட்ட பதற்றத்தை தொடர்ந்து அங்கு சென்ற வடக்கு ஆளுநர் சுரேன் ராகவனின் உறுதிமொழியையடுத்து சுகாதாரத் தொண்டர்களின் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

நேர்முகத்தேர்வுக்கு தோற்றியும் இந்த நியமனம் தொடர்பாக பெயர் குறிப்பிடப்படாதவர்களின் மாவட்ட பிரதிநிதிகள் வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

குறித்த கலந்துரையாடலின் பின்னர், வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களுக்கு வழங்கப்படவிருந்த நியமனங்கள், சில முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணை நிமித்தம் பிற்போடப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்ததை அடுத்தே சுகாதாரத் தொண்டர்கள் தமது போராட்டத்தை கைவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.