Home செய்திகள் கிளிநொச்சி விபத்தில் கல்வி அதிகாரி பலி!

கிளிநொச்சி விபத்தில் கல்வி அதிகாரி பலி!

9
0

கிளிநொச்சி பகுதியில் அதி வேகத்தில் வந்த சிறியரக பட்டா வாகனம் ஒன்று கட்டுப்பாடடை மீறி முன்னால் சென்றுகொண்டிருந்த உந்துருளியுடன் மோதியதில் உந்துருளியில் பயனித்தவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (30/08) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்தில் கோபாலபிள்ளை செல்வராஜா என்பவரே உயிரிழந்துள்ளார்.

விபத்தில் பலியான கோபாலபிள்ளை செல்வராஜா வட்டக்கச்சி மத்திய கல்லூரி, கண்டாவளை மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் முன்னாள் அதிபரும், கிளிநொச்சி ஓய்வுநிலை பிரதிக் கல்விப் பணிப்பாளரும் ஆவார்.

இரணைமடு சந்தியிலிருந்து அவரது விட்டிற்கு உந்துருளியில் சென்றுகொண்டிர்உந்த போதே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது.

உந்துருளியின் பின்னால் பட்டா வாகனம் மிக வேகமாக மோதியதில் அடித்து தூக்கி விசைப்பட்ட கோபாலபிள்ளை செல்வராஜா எதிர் திசையில் வந்த பேருந்துடன் மோதுண்டு ஸ்தலத்திலேயே பலியானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்திற்கு காரணமான பட்டா வாகன சாரதியையும், விசாரணைக்காக பேருந்து சாரதியும் காவல்துறையினர் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.