Home செய்திகள் அந்தியேட்டி கிரியைக்காக யாழ் சென்ற பெண் மாயம்!

அந்தியேட்டி கிரியைக்காக யாழ் சென்ற பெண் மாயம்!

12
0

யாழ்ப்பாணத்தில் உள்ள தனது உறவினரின் அந்தியேட்டி கிரியைக்கு சென்ற தனது மனைவியை காணவில்லை என கணவர் காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

வவுனியா காத்தான்கோட்டம் பகுதியைச் சேர்ந்த ஜெனிதாஸ் விமலேஸ்வரி (39-வயது) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

குறித்த பெண் கடந்த 27ம் திகதி வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சில்வதற்காக அவரது நண்பியுடன் மோட்டார் சைக்கிளில் வவுனியா பஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அன்றையதினம் மாலையாகியும் மனைவி யாழ்ப்பாணம் சென்றடையாத நிலையில் கணவர் மனைவியின் கைபேசிக்கு அழைப்பை நேற்படுத்தியுள்ளார். ஆனால் மனைவியின் கைபேசியும் தொடர்பின்றி இருந்தமையால் சந்தேகம் கொண்ட கணவர் வவுனியா காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.