Home செய்திகள் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நீதி வழங்க கோரி ஓமந்தையில் மாபெரும் போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நீதி வழங்க கோரி ஓமந்தையில் மாபெரும் போராட்டம்!

15
0

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் உரிய நீதியை அரசு வழங்க வேண்டுமென வலியுறுத்தி உறவுகள் கையளிக்கப்பட்ட ஓமந்தை மண்ணில் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி அமைந்திருந்த இறம்பைக்குளம் வரை பேரணியாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சென்றனர்.

அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவுகள் தமது காணாமல்போன உறவினர்களை ஒப்படைக்குமாறும் அரசு நீதியைத் தர வேண்டும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் வேண்டாம் எனவும் கோசங்களை எழுப்பினர்.

இப் பேரணியில் பல தமிழ் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பங்குபற்றியிருந்தமையை காணமுடிந்தது.