Home செய்திகள் நாடு தழுவிய ரீதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள்!

நாடு தழுவிய ரீதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள்!

32
0

நாடு தழுவிய ரீதியில் வைத்தியர்கள் இன்று காலை 8 மணி­மு­தல் 24 மணித்­தி­யால வேலை நிறுத்த போராட்­டத்­தில் ஈடுப­ட்டுள்ளனர்.

சுகா­தா­ரத்­து­றை­யில் காணப்படும் பல்­வேறு குறை­பா­டு­களை இரு வாரங்­க­ளில் நிவர்த்தி செய்து தரு­மா­றும் அரச மருத்­துவ அதி­கா­ரி­கள் சங்­கம் அண்­மை­யில் அர­சி­டம் கோரிக்கை விடுத்­திருந்த போதும் அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் இன்றி அரசாங்கம் இருப்பதை கண்டித்தே இன்றைய போராட்டம் அரச மருத்­துவ அதி­கா­ரி­கள் சங்­கத்­தி­னரின் ஏற்பாட்டில் நடைபெறுகிறது.

இன்­றைய வேலை நிறுத்­தத்­தின் பின்­ன­ரும் தமது கோரிக்­கை­க­ளுக்கு அரசு செவி­சாய்க்­க­வில்லை என்­றால் அடுத்த கட்­ட­மாக முன்­னெ­டுக்­கப்­ப­டக் கூடிய நட­வ­டிக்­கை­கள் குறித்து அரச மருத்­துவ அதி­கா­ரி­கள் சங்­கத்­தின் மத்­திய குழுக் கூட்­டத்­தில் தீர்­மா­னிக்­கப்­ப­டும் என்­றும் அந்த சங்­கம் மேலும் தெரி­வித்­துள்­ளது.