Home உலக செய்திகள் 13 இலங்கையர்களை திருப்பி அனுப்பியது அவுஸ்திரேலியா!

13 இலங்கையர்களை திருப்பி அனுப்பியது அவுஸ்திரேலியா!

16
0

சிலாபம் பிரதேசத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற 13 ஆண்கள் அவுஸ்திரேலிய அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்டு இலங்கை வந்தடைந்துள்ளனர்.

இலங்கையர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இன்று (16/08) காலை மேற்படி 13 பேரும் நாட்டை வந்தடைந்தனர்.

இவ்வாறு திருப்பியனுப்பட்டவர்கள் விமான நிலைய குடிவரவு – குடியகழ்வு அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.